கடல் உணவுகளை உட்கொள்ளலாம்; எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

🕔 June 23, 2021

டல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக அதன் உரிமையாளர்களிடம் நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிதி அடுத்த இரு வாரங்களுக்குள் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீப்பற்றியமையை அடுத்து, நாட்டின் பல பாகங்களிலும் ஆமை, டொல்பின் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கி வருகின்ற நிலையிலேயே, கடல் உணவுகளை உண்பதில் எவ்வித ஆபத்தும் இல்லை என, கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்