ஒரே பிரசவத்தில் 10 குழந்தை; தென்னாபிரிக்க பெண் பெற்றெடுத்ததாக வெளியான செய்தி புரளி

🕔 June 20, 2021

தென்னாபிரிக்காவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த செய்தியானது ஒரு புரளி எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு பெண்ணொருவர் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தமைக்கான எந்தவித ஆதாரங்களையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என, தென்னாபிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேஜிங் மாகாண அரசு – ட்விட்டரில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்; கோசியம் தாமரா சித்தோல் எனும் 37 வயதுடைய பெண், நகரத்திலுள்ள வைத்தியசாலையில் 07 ஆண் மற்றும் 03 பெண் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றமைக்கான எந்தவித ஆதாரங்களையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்திலுள்ள எந்தவொரு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் இவ்வாறானதொரு பிரசவம் நடந்தமைக்கான பதிவுகள் எவையும் இல்லை எனவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மேலே பெயர் குறிப்பிடப்பட்ட பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றதாக சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்