பெளத்த பிக்கு கொலை: முதியோர் இல்லத்தில் சம்பவம்

🕔 June 20, 2021

முதியோர் இல்லத்தில் தங்கி வந்த பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு – பமுனுகம பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தங்கி வந்த மேற்படி பௌத்த பிக்கு, அங்கிருந்த சக முதியோர் ஒருவரால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.

மனநலப் பாதிப்புக்குள்ளான முதியோர்களே இங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பௌத்த பிக்குவை அங்கு தங்கியிருந்த சக முதியவரான 73 வயதுடைய ஒருவரே, பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்