அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு

🕔 June 18, 2021

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கான படுக்கைகள் உள்ளடங்கிய தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) எதிர்வரும் வாரங்களில் திறக்கப்படவுள்ளது.

வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் இதனைத் தெரிவித்தார்.

மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேற்படி தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜுலை மாதம் திறக்கப்படவுள்ள இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில், கொவிட் நோயாளர்களுக்காக 03 படுக்கைகளைக் கொண்ட பகுதி வேறாக இருக்கும் என்றும் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் மேலும் கூறினார்.

திறக்கப்படவுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வேலையாளர்களுக்கான‌ பயிற்சி (staff training) எதிர்வரும் வாரம் நிறைவு பெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்