கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

🕔 June 5, 2021

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 07ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ளன.

கொவிட்-19 தொற்றால் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலே அதிகூடிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட முதல் மூன்று பிரதேசங்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், அடுத்த கட்டமாக கல்முனைப் பிராந்தியத்தில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரச பணியாளர்கள், கர்ப்பிணிகள் மற்றும் முன்னணி செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கும் இந்த தடுப்பூசியை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்