கப்பல் எரிந்தமையினால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மீன்களை சாப்பிடலாமா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் விளக்கம்

🕔 June 3, 2021

க்ஸ்-பிரஸ் பேல் கப்பலினால் பாதிக்கப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் உள்ள மீன்களின் உடல்களில் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருப்பது இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 400உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

குறித்த கடல் பிரதேசத்தில் மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வுக்கு பொருத்தமற்ற மீன்கள் சந்தைக்கு வராது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பயண கட்டுப்பாடு விதித்திருந்தாலும் நடமாடும் வாகன வியாபாரிகள் மீன் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கையின் மீன்வளம் மற்றும் கடற்கரை உட்பட கடல் பகுதியின் நீண்டகால விளைவுகள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்