மொரட்டுவ மேயருக்கு விளக்க மறியல்

🕔 May 28, 2021

மொரட்டுவ மாநகர சபைத் தலைவர், சமன் லால் பெனாண்டோவை, எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தனிப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அவர் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை ஜூன் 11 வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

தொடர்பான செய்தி: மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்