இலங்கை அரசின் இணையத்தளங்களுக்குள் ‘தமிழ் ஈழ இணையப் படை’ ஊடுருவல்: முள்ளிவாய்க்கால் தினத்தில் சம்பவம்

🕔 May 18, 2021

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு, மின்சக்தி அமைச்சு, சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் ரஜரட்டை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் சிலரால் ஊடுருவப்பட்டுள்ளதாக இணையப் பாதுகாப்புக்கான தேசிய மையம் (SLCERT) தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும நிலையில் இந்த ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ இணையப் படை (Tamil eelam cyber force) எனும் அமைப்பு இதற்கு உரிமை கோரியுள்ளது.

மேற்படி இணையத்தளங்களுக்குள் ஊடுருவியவர்கள் அங்கு விடுதலைப் புலிகளின் கொடியினைக் காட்சிப்படுத்தியிருந்ததோடு, Tamil eelam cyber force (தமிழீழ இணையப் படை) என, ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் தற்போது, ஊடுருவல் நடத்தப்பட்ட இணையத்தளங்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

Comments