ஈஸ்டர் தினத் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடிதம்

🕔 May 15, 2021

ஸ்டர் தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதா என அவர் பொலிஸ்மா அதிபரிடம் அவர் வினவியுள்ளார்.

05 சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் முழுமை பெறாமல் உள்ளதாக அவர் அந்தக் கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்