பெண்களின் புகைப்படங்களை ஆபாச வசனங்களுடன் பதிவேற்றிய விமானப் படை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

🕔 May 14, 2021

‘மனைவி – பரிமாற்றம்’ (Wife-Swapping) எனும் பெயரில் பேஸ்புக் பக்கமொன்றை இயக்கிய வந்த 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமான கருத்துக்களைக் கொண்ட பெண்களின் பல புகைப்படங்கள் காணப்பட்டதாக திவயின செய்திப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

குறித்த பேஸ்புக் பக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல முறைப்பாடுகள் தொடர்பில் விசேட புலனாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர், சந்தேக நபரை களுத்துறை பொஸில் குற்றப்பிரிவினர் கைது செய்தனர்.

விமானப்படையில் ‘ட்ரோன்’ இயக்குநராகப் பணியாற்றும் சந்தேகநபர், பதுரலிய பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தை இயக்குவதற்காக சந்தேக நபர் பயன்படுத்திய பல கைத்தொலைபேசிகளை பொலிஸார் இதன்போது கைப்பற்றினர்.

ஆபாசமான வார்த்தைகளுடன் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டமைக்காக, சந்தேக நபருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைய பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேக நபரை மே மாதம் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்