கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது

🕔 November 21, 2015

Arrest– க.கிஷாந்தன் –

ஞ்சாவுடன் நான்கு சிறுவர்கள் ஹட்டனில் இன்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நகருக்கு தொழில்புரிய செல்லவிருந்த நிலையில், குறித்த சந்தேக நபர்களான நான்கு சிறுவர்களும் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது நான்கு பேரிடமும் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, 04 கஞ்சா ‘பக்கட்’களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி சிறுவர்களை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்