அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

🕔 May 7, 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் கல்வி வகுப்புகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களும் மூடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதால் நாட்டிலுள்ள பாடசாலைகளை மே 01 ஆம் திகதி தொடக்கம் மூட அரசாங்கம் முடிவு செய்தது.

அதன் காரணமாக இன்று வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே மறு அறிவிப்பு வரும் வரையில் அனைத்து பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும்மூடுவதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

Comments