ஜனாதிபதியை விமர்சித்தார்; விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

🕔 April 18, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விஜயதாச ராஜபக்ஷ விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறான விவகாரங்களை கையாள்வதற்கு பொதுஜன பெரமுனவுக்கு ஒரு முறையுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த முறையை பின்பற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜயதாச ராஜபக்ஃவின் அரசியல் வரலாறும் நடத்தைகளும் மக்கள் நன்கு அறிந்த விடயம் எனவும் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் – தனிநாடு ஒன்றுக்கான அம்சங்களைக் கொண்டு அமையவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்கள் முன்னிலையில் ஆளும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியிருந்தார்.

அவ்வாறு – தான் கூறிமைக்காக, மறுநாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நாகரீகமற்ற வார்த்தைகளால் திட்டியதாகவும் பின்னர் ஊடகங்களிடம் விஜேதாச கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, விஜதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்