புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல்

🕔 April 5, 2021

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணமடைகின்றனர் என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் 64 பேர் தினமும் புற்நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் சுகாதாரத்துறை தொற்றா நோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புற்றுநோய்க்கான மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பது மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையை செயல்படுத்தும் திட்டம் ஆகியவை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெரஹெரவில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் கதிரியக்க மருந்து உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் டலஸ் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்