ஏழு மாவட்டங்களில் அதிக வெப்பநிலை எச்சரிக்கை: மக்கள் என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

🕔 April 4, 2021

முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பமான வானிலை காணப்படும் என்றும் அந்தத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பருவமழைக்கு இடைப்பட்ட காலங்களில் இதுபோன்ற வெப்பமான வானிலை சாத்தியமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உட்பட உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை வெளியில் செல்வோர் மெல்லிய,வெள்ளை நிறமான அல்லது இள நிறமுடைய ஆடைகளை அணிவது சிறந்தது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments