கணிக்கறிக்கை சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகள்: அங்கீகாரத்தை ரத்துச் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

🕔 March 31, 2021

ங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் 04 கட்சிகள் 2019 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையை இதுவரை கையளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்சிகள் அன்றைய தினம் கணக்கறிக்கைகளை வழங்க தவறும் பட்சத்தில் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments