ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், இலங்கை தொடர்பாக சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, த ஹிந்து தகவல்

🕔 March 18, 2021

.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

த ஹிந்து பத்திரிகை இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை இந்தியா எதிர்த்து வாக்களிக்கும் என இந்தியா உறுதி வழங்கி இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி த ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விடயம் தொடர்பாக இன்னும் இந்தியா எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments