றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை

🕔 March 16, 2021

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ச – பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் வகையிலான அறிக்கைகளை விடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

மார்ச் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கத்தக்கதாக இந்தத் தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிபதி அருண அலுத்கே பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, மூன்று தனியார் தொலைக்காட்சிகளுக்கும் இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் வீரவன்சவின் மேற்குறிப்பிட்டவாறான அறிக்கைகளை ஒளிபரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளமாறும், குறித்த மூன்று தொலைக்காட்சிகளுக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவதூறு வழக்கு ஒன்றினை கடந்த 09ஆம் திகதி தாக்கல் செய்தமையை அடுத்து, விமல் வீரவன்சவுக்கு எதிரான மேற்படி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக, குறித்த வழக்கில் றிசாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்