உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை

🕔 November 19, 2015

Food items - 0112
த்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி, மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபா, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 145 ரூபா, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தோல் அகற்றப்பட்ட கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபா, பொதி செய்யப்பட்ட கோதுமை மா ஒரு கிலோ 95 ரூபா, செத்தல் மிளகாய் ஒரு கிலோ 355 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்தக் கட்டுப்பாட்டு விலைகள் அமுலுக்கு வரும் என்று, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்