‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித

🕔 November 18, 2015

Rajitha - 011வன்காட் விவகாரம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, அமைச்சர் ராஜித மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

எவன்காட் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை கண்டித்ததாக, அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வௌியாகின.

இந்த நிலையில், பிரதமர் தன்னையே இவ்வாறு கண்டித்ததாக சிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக மேற்படி அறிக்கையில் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தான் கடந்த 16ம் திகதி  வௌிநாடு சென்றிருந்ததாகவும், எவன்காட் அல்லது வேறு எந்தவொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காக, தான் பிரதமரை சந்திக்கவில்லை எனவும், அந்த அறிக்கையில் அவர் விபரித்துள்ளார்.

இதேவேளை, எவன்காட் சம்பவம் தொடர்பில், தன்னை பிரதமர் கண்டிக்கவில்லை என அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்