கொழும்பில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற உடல் தொடர்பில், பொலிஸார் மேலதிக தகவல் வெளியீடு

🕔 March 2, 2021

கொழும்பு – டாம் வீதியில் நேற்று பயண பையில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற உடல், சந்தேகநபரால் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு 143ஆம் இலக்க பஸ்ஸில் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இது குறித்து கூறுகையில்; “குற்றவாளி பையை கைவிட்டதாக சி.சி.ரி.வி காட்சிகள் கிடைத்துள்ளன. மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது” என்றார்.

பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது சந்தேகநபர் ஹங்வெல்லவில் வைத்து பஸ்ஸில் ஏறி இருப்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 20 வயது பெண் என சந்தேகிக்கப்படுவதாகவும், சடலம் கொழும்பில் உள்ள பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேக நபர் அல்லது சம்பவம் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள், 0718591557 அல்லது 0112433333 வழியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..

Comments

புதிது பேஸ்புக் பக்கம்