ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை, அவரின் கட்சியே நிராகரித்தது

🕔 February 25, 2021

ஸ்டர் தின பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த போது, ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜனாதிபதி அறிக்கையில், தாக்குதலைத் தடுப்பதற்கான பொறுப்பிலிருந்து தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Comments