ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள்

🕔 February 23, 2021

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டுள்ளனர்.

அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று செவ்வாய்கிழமை இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலுள்ள பொதுமக்கள் – கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொள்ளும் பொருட்டு 08 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையின் மருத்துவ பிரிவு இந்த நிலையங்களை அமைத்துள்ளன.

  • காக்கை தீவு – கொழும்பு 15
  • பண்டாரநாயக்க மாவத்தை மகப்பேற்று இல்லம் – கொழும்பு 12
  • பி.டி சிறிசேன மைதானம் – கொழும்பு 10
  • கம்ப்பெல் பூங்கா – கொழும்பு 08
  • பொது நூலகம் – கொழும்பு 07
  • டொரிங்டன் அடுக்குமாடி குடியிருப்பு – கொழும்பு 05
  • அண்டஸன் அடுக்குமாடி குடியிருப்பு – கொழும்பு 05
  • சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் (மாவட்டம் 05) – கொழும்பு 06 (வெள்ளவத்தை)

மேற்கண்ட இடங்களில் குறித்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பில் நாலரை லட்சம் பேருக்கு கொவிட் தடுப்பு மருந்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்