நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு

🕔 November 17, 2015

President - 008நிறைவேற்று ஜனாதிபதி முறைமைகளை நீக்கி, நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை, நாளை புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய தேர்தல் முறைமை தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றையும் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி, அதன் அதிகாரங்களை நாடாளுமன்றுக்கு கையளிக்கும் சகல நடவடிக்கைகளையும் விரைவில் மேற்கொள்வதாக, அண்மையில் மறைந்த சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்