ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்

🕔 February 20, 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்ற வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிறை அதிகாரிகளால் புடைசூழ., கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைகள் திணைக்கள பேருந்தில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்.

நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்காக 04 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, அகுனகோலபெலாஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Comments