கர்ப்பிணித் தாய்மாருக்கு, நுளம்புவலை வழங்கி வைப்பு

🕔 November 17, 2015

Net - 012
– அபு அலா –

றக்காமம் பிரதேசத்திலுள்ள 200 தமிழ், முஸ்லிம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நுளம்பு வலைகளை வழங்கி வைத்தார்.

இறக்காமம் சர்வோதய அமைப்பின் அனுசரனையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 வறிய குடும்பங்களின் கற்பிணித் தாய்மார்களுக்கு இந்த நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில், சர்வோதய அமைப்பின் உதவிப் பணிப்பாளர் அஸ்வித அனுரத்த, கிழக்கு மாகாண சகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜெமீல் காரியப்பர், சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம். றசீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Net - 014

Comments

புதிது பேஸ்புக் பக்கம்