எதிர்வரும் வாரத்தில், பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராணுவத் தளபதி

🕔 February 15, 2021

நாட்டிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு எதிர்வரும் வாரம் தொடக்கம், கொவிட் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சனத் தொகையில் 09 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில், முதல் கட்டமாக 05 லட்சம் தடுப்பூசிகள் 07 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று திங்கட்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் வாரம் தொடக்கம் சாதாரண மக்களுக்கு தடுப்பூசியை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவை மார்ச் மாத ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் எனவும் ராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments