ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

🕔 February 5, 2021

ஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தனது நாடாளுமன்ற பதவியை ரத்து செய்வதை நிறுத்துமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்