கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி

🕔 January 26, 2021

கொவிட் தடுப்பு மருந்ததை முதலில் பெறும் குழுக்களின் முன்னுரிமை பட்டியலை அரசாங்கம் இறுதி செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட தடுப்பு மருந்து தொடர்பில் – தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியிலுள்ள முன்னணி பணியாளர்கள், முன்னுரிமைப்படி முதலில் தடுபு மருந்தைப் பெறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து பெறப்படும் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவற்றினை கொழும்பில் சேமித்து வைப்பதற்காக ராணுவம் கொண்டு செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்கவின் கீழ் செயற்படும் குழு இது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் கையாளும்.

தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசிகளைக் கொண்டு செல்லுதல் மற்றும் சேமித்தல் ஆகியவை இந்த நடைமுறைகளில் அடங்கும்” என்று ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்