அதிக பனி மூட்டம்; சாரதிகள் எச்சரிக்கை
🕔 November 13, 2015


– க. கிஷாந்தன் –
ஹட்டன் பகுதியில்இன்று வெள்ளிக்கிழமை மாலை வேளையிலிருந்து அதிக பனி மூட்டம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக வாகனங்களை செலுத்துவில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன, கொட்டகலை மற்றும் நோர்வூட் போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா வீதி ஆகியவற்றில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றன.
எனவே, வாகனங்களின் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments

