ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு

🕔 January 20, 2021

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நேற்று செவ்வாய்கிழமை சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்று சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை.

எதிர்வரும் சில தினங்களில் அவர் சாட்சி வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்த உமர் மொஹமட் எனும் நபர் நேற்றைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.

தடுப்பு காவலிள் வைக்கப்பட்டுள்ள சாட்சி விசாரணைகளுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

குறித்த நபர் சாட்சி வழங்கியதன் பின்னர், சாட்சி விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments