மானிய விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெறுவதற்கு, 2500 ஊடகவியலாளர்கள் தகுதி; ஊடக அமைச்சர்

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் கருணாதிலக்க மேற்படி தகவலை வெளியிட்டார்.
இதனடிப்படையில், மானிய விலையில் மோட்டார் சைக்கிள்களைப பெற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தகமைகளை மேற்படி ஊடகவிலயாளர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.
மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்களுக்கு, அண்மையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
ஏனைய நடவடிக்கைள் நிதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், ஊடகவியலாளர்கள் தாங்கள் விரும்பிய மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய முடியும்.
மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்ய பணம் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு சில நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.