60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது

🕔 January 4, 2021

நீர்கொழும்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையொன்றின்போது 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் படகு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதோடு, நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த படகில் ஹாசீஸ் உட்பட 180 கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் சிறிய பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மேற்படி போதைப் பொருள்கள், 09 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு உளவுத்துறை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் ஆகியவற்றுடன் விமானப்படையும் உதவியுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் – தொடுவாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் தடுப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments