பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பினார்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என்பவருக்கு எதிராக முறைப்பாடு

🕔 January 1, 2021

– பாறுக் ஷிஹான் –

பேஸ்புக் ஊடாக அவதூறு பரப்பினார் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் என்பவருக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது படத்துடன், வேறு ஒரு நபரின் படத்தை இணைத்து போலியான தகவல் ஒன்றினை கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தவம், பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்றும், அது தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்து, கல்முனையைச் சேர்ந்த வர்த்தகர் எம்.எச்.எம். இப்ராஹீம் என்பவர் மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளார்.

வெளிநாட்டு தூதுவர் ஒருவருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் மாற்றம் செய்து, அந்தப் புகைப்படத்தில் வெளிநாட்டுத் தூதுவர் இருந்த இடத்தில் தன்னுடன் வேறு ஒரு நபரை இணைத்து, அதன் மூலம் தனக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Comments