தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி மஸாஹிர் தெரிவு

🕔 December 25, 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட வரலாற்றில் ஒருவர் மூன்றாவது முறையும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

கலாநிதி மஸாஹிர் கடந்த 06 ஆண்டுகளாக பீடத்தின் அதி துரித வளர்ச்சிக்கு மிகக் காத்திரமான பல பங்களிப்புகளை வழங்கியதோடு, மிக அண்மையில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை ஆரம்பிக்க முழு மூச்சாக செயல்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் தலைமையில் புதன்கிழமையன்று இடம்பெற்ற பீடாதிபதியை தெரிவு செய்வதற்கான விஷேட பீட சபைக் கூட்டத்திலேயே இவர் மூன்றாவது தடவையும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அந்த வகையில், இவர் அடுத்த மூன்று ஆண்டுகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்