சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி இறுதி அஞ்சலி

🕔 November 10, 2015

Sobitha thero - 097மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை, அவரது பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா அநுர குமாரதிஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள் நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.

அன்னாரின் இறுதி கிரியை, நாளை மறுதினம் வியாழக்கிழமை, பூரண அரச மரியாதையுடன் இடம்பெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்