எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு

🕔 November 9, 2015

Rajitha - 011ர்ச்சைக்குரிய எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

இதன்பிரகாரம், ர்ச்சைக்குறிய எவன்கார்ட் விவகாரம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே, அமைச்சர் ராஜித மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

மேற்படி சம்பவங்களுடன் தொடர்புபடக்கூடிய பாதுகாப்பு பிரிவு, நீதித்துறை உட்பட அனைத்து பிரிவுகள் மற்றும் இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர்களுடனும் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாகவும் இதன்போது ராஜித சுட்டிக்காட்டினார்.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்கவுள்ளதாவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்