வரவு – செலவு திட்டம் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்

🕔 December 10, 2020

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதனடிப்படையில் வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.

Comments