மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

🕔 November 29, 2020

ஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதியொருவர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குழுக்கள் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் பல கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது 183 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியது. இதன் அடிப்படையில் இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 1091 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments