மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி

🕔 November 17, 2020

மீன்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்படலாம்’ எனும் அச்சத்தை போக்கும் வகையில், கடற்றொழில் ராஜாங்க முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் வெத ஆராச்சி – ஊடகவியலாளர்கள் முன்பாக பச்சையாக மீன் ஒன்றை உட்கொண்டார்.

கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் திலீப் வெதஆராச்சி; அச்சமின்றி மக்கள் மீனை சாப்பிடுமாறு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவது அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் கடமை என்றும் அவர் கூறினார்.

மேலும் தற்போது காணப்படும் சூழ்நிலையில் மீனவர் சமூகத்திற்கு பொதுமக்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி மீன் வாங்குவதாகும் என்றும் திலீப் வெத ஆராச்சி கூறினார்.

இதன்போது, மீன் உண்பதால் கொரோனா ஏற்பட்டு விடுமோ என, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தினை போக்கும் வகையில், ஊடகவியலாளர்கள் முன்பாக முன்னாள் அமைச்சர் பச்சையாக மீன் ஒன்றினை புசித்து காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்