முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

🕔 November 8, 2015

Kandy - SLMC - 05
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக, அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீண்டும் ஏகமனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மு.காங்கிரசின் 26வது வருடாந்த பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ மண்டபத்தில், கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்றபோதே இந்த தெரிவு இடம்பெற்றது.

இதன்போது, பின்வரும் தெரிவுகள் ஏகமனதாக இடம்பெற்றன;

தலைவர் – ரவூப் ஹக்கீம், தவிசாளர் – பசீர்சேகுதாவூத், செயலாளர் – எம்.ரி. ஹஸன் அலி, பொருளாளர் – எம்.எஸ். அஸ்லம், பிரதித் தலைவர்களாக – முஸ்லிம் முழக்கம் எம்.ஏ. மஜீத், ஹாபிஸ் நசீர்அஹமட் ஆகியோர் கடந்த முறை வகித்த அதே பதவிகளுக்காக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இம் மாநாட்டில், மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட அதிதிகள் பலர் கருந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, மரம் எனும் பத்திரிகையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மாநாட்டின் இறுதியில், கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விசேட சொற்பொழிவாற்றினார்.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருந்தும், அழைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கானோர் இப்பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.Kandy - SLMC - 03Kandy - SLMC - 01Kandy - SLMC - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்