நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை

🕔 October 26, 2020

நாடாளுமன்றத்தை இரண்டு நாட்களுக்கு மூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று திங்கட்கிழமையும் நாளையும் நாடாளுமன்றம் மூடப்படவுள்ளது.

இந்த இரண்டு நாட்களிலும் கிருமி தொற்று நீக்கப்படவுள்ளமையினால் ஊழியர்களை சேவைக்கு சமூகமளிக்கு வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், அன்றை தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டால் மாத்திரம் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்குமாறு ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Comments