நாட்டில் கொரோனாவினால் 16ஆவது நபர் மரணம்

🕔 October 26, 2020

நாட்டில 16ஆவது கொரோனா மரணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்தவராவார்.

இதேவேளை, நேற்று இரவு 11 மணி வரையிலான தகவல்களின் படி, நாட்டில் இதுவரை 7,872 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் 04 கோடியே 30 லட்சத்து 20,287 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாகவும் தெரியவருகிறது.

Comments