156 வாக்குளால் 20ஆவது திருத்தம் நிறைவேறியது; ஹக்கீம் தவிர, மு.கா.வின் அனைத்து எம்.பி.களும் ஆதரவு

🕔 October 22, 2020

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இடண்டாம் வாசிப்பு 156 வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது.

சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதில் மு.காங்கிரஸின் 05 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அந்தக் கடசியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தவிர, ஏனைய நால்வரும் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் ஆகியோர் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த அதேவேளை, அந்தக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

Comments