றிசாட் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்

🕔 October 20, 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்றிசாட் பதியூதின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேனவில் அமைந்துள்ள கைதிகளுக்காகன தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சுகாதார ஆலோசனைக்கு அமைய விளக்கமறியலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய செயற்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதியன்று தலைமறைவாகி இருந்த முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Comments