
– சர்ஜுன் லாபீர் –
சிறுநீரக நோயாளர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் திட்டத்துக்கு அமைவாக, கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை பயனாளிகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். பர்சானா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், கணக்காளர் வை. ஹபிபுல்லா, நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல். பதுருத்தீன் ஆகியோர் கலந்து கொண்டு உதவி தொகைகளை வழங்கி வைத்தனர்.
இன்றைய நிகழ்வில் முதல் கட்டமாக 17 சிறுநீரக நோயாளிகளுக்கான இரண்டு மாதாங்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.



