மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு, சூப்பர் மார்கெட்டில் திருட்டு

🕔 October 10, 2020

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திருடிச் சென்றுள்ள நபர் ஒருவர். அதற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றினையும் எழுதி, அங்கு விட்டுச் சென்றுள்ளார்

இந்தியா – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது.

அங்கு சுமார் 65,000 ரூபாய் மதிப்புள்ள (இலங்கை மதிப்பில் சுமார் 165000 ரூபா) பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் (இலங்கை மதிப்பில் சுமார் 13 ஆயிரம் ரூபா) பணத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர், திருடியமைக்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றை அங்கு விட்டுச் சென்றுள்ளார்.

“என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பசிக்கிறது. உங்களுக்கு இது ஒருநாள் வருவாய்தான். ஆனால் என் குடும்பத்தின் மூன்று மாத வருவாய்க்கு இது சமம். மீண்டும் ஒரு முறை என்னை மன்னித்து விடுங்கள்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து பிரபல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments