நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

🕔 October 9, 2020

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் பல ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்னமும் கண்டுபிடிக்க வேண்டிய நிலையிலுள்ளதாக, பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றுவரை 400 தொழிலாளர்களே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆடைதொழிற்சாலை தொழிலாளர்கள் தாமாக முன்வந்து தங்களை பதிவு செய்வதற்கு நேற்றுடன் காலஅவகாசம் முடிவடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர் தனிமைப்படுத்தலை தவிர்க்க முயல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments