கலைத்துறைக்கான வெளிவாரி பட்டப் படிப்புபுக்குரிய பதிவுகள் இடைநிறுத்தம்

🕔 September 5, 2020

லைத்துறைக்கான வௌிவாரி பட்டப் படிப்புக்குரிய புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கலைத்துறைக்கான பாடநெறிகளை மீளாய்வுக்கு உட்படுத்தவும் புதிய பாடநெறிகளை சேர்ப்பதற்காகவும் புதிய நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

இதேவேளை, சில பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப் படிப்புக்காக பதிவு செய்துள்ள மாணவர்களின் பதிவுகள் காலாவதியாகவுள்ள நிலையிலும், அவர்களின் பட்டப்படிப்பு இன்னும் நிறைவுசெய்யப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments