சம்மாந்துறையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை

🕔 November 2, 2015

Protest - 02
– யூ.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறையில் இன்று திங்கட்கிழமை கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று நடைபெற்றது.

இலங்கை உயர் தொழில் நுட்பக் கற்கை நிறுவகத்தின் உயர்  தேசிய கணக்கீட்டு டிப்ளோமா (HNDA) மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்களுக்கு எதிராக  இடம்பெற்ற  வன்முறையைக் கண்டித்தும், உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறிக்கு வணிக இளமாணி பட்டத்திற்கு சமமான பட்டத்தை மீண்டும் வழங்கக் கோரியும் இந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை உயர் தொழில் நுட்பக் கற்கை நிறுவகத்தின்  உயர் தேசிய கணக்கீட்டு மாணவர்கள் மேற்படி கவன ஈர்ப்பு நடவடிக்கையை ஒழுங்கு செய்திருந்தனர்.

சம்மாந்துறை விளினயடிச் சந்தியில்  இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியானது, பிரதான வீதியூடாக ஹிஜ்ரா சந்தியை வந்தடைந்தது.

இதன் போது பேரணியில் கலந்துகொண்ட மாணவ,மாணவிகள்  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட
சுலோகங்களை ஏந்தியவாறு  ஊர்வலத்தில்  கலந்துகொண்டனர்.Protest - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்